கிழக்கு கரையோர பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை

மட்டக்களப்பில் விசேட ரோந்து நடவடிக்கையில் கடற்படையினர் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலாமாக கரையோர பிரதேசங்களின் ஊடாக பல்வேறுபட்ட சட்டவிரோத நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக தொடர்ச்சியாக தகவல் கிடைத்து வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த தகவல்களுக்கு அமைவாக இந்த ரோந்து நடவடிக்கை இடம் பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.